WHAT’S HOT NOW

ads header

Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

Power Rangers SPD episode 1 tamil

Followers

Search This Blog

Life & style

Games

Sports

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்: எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசின் நிலைப்பாடுதான் என்ன?!

தமிழக அரசு சேலம் எட்டு வழி்ச்சாலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் நிதின் கட்கரி, ``தமிழக அரசு அப்படியாக எந்த அனுமதியும் கோரவில்லை. திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ”எனப் பதிலளித்துள்ளார். இந்தப் பதில் திமுகவின் 8 வழிச்சாலையின் நிலைப்பாடு குறித்தான  கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், மத்திய அரசால் எட்டுவழிச்சாலை அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தினால் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  எனவே, இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும்  6 மாவட்டத்தின் விவசாய அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது.

நிதின் கட்கரி

ஆனால், 2021-ம் ஆண்டு வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தவுடன் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ``நாங்கள் வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்தோம். சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்குத் திமுக என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” எனப் பேசினார். மேலும், சட்டமன்றத்தில் 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி திட்டம் செயல்படுத்த இருப்பதாகக் கூறியதும் சர்ச்சையானது.

எட்டு வழிச்சாலைத் திட்டம்

திட்டம் எந்த வகையில் கொண்டுவரப்பட்டாலும் விவசாய நிலம் கையகப்படுத்தினால், நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 43-ல், ''விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் நிலைப்படுகளின் இந்த அறிவிப்புகள், அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்னும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது, ``இரட்டை வேடம் போடுவது திமுகவுக்கு கை வந்த கலை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு அறிவிப்பு, அதை ஆளுங்கட்சியாக மாறியபின் முற்றிலுமாக மாற்றுவது தான் திமுகவின் வாடிக்கை. காரணம், 8 வழிச்சாலையின் தேவை ஆளுங்கட்சியாக மாறிய பிறகுதான் அவர்களுக்குப் உரைத்திருக்கிறது.

8 வழிச் சாலை அமைக்க திட்டமிட்டபோது, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பாத நிலையில், சமூக விரோத சக்திகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது திமுகவினர் தான். அந்த வகையில் நிதின் கட்கரி, திமுக 8 வழச்சாலையை எதிர்ப்பதாக காட்டிய பிம்பத்தை உடைத்துவிட்டார். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக இணைந்த போது விமர்சித்தவர்கள், ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பின் அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தவறு சொல்லவில்லை. ஆனால், இந்த மாற்று நிலைப்பாடுகள் ஏன் என்பதே எங்களின் கேள்வி. தவிர, திமுக சட்டமன்றத்தில் அறிவித்தது போல் ஆறு வழிச்சாலையாக மாற்ற முடியாது. மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி நிலைப்பாட்டை மாற்றி வருகிறது திமுக” என சாடினார்.

நாராயணன் திருப்பதி

இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். அவர், ``ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமெனில், புதிய திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம். ஆனால், அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொண்டுவந்த 8 வழிச்சாலை திட்டத்தை, ’எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலிருந்து சென்னைக்கு ரோடு போடுவதாக’ தவறான பரப்புரையை மேற்கொண்டனர். ஆனால், அந்தத் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்தபின் கையில் எடுத்து நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகள் மற்றும் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தினர். ஆனால், இப்போது மக்கள் இதற்கு உண்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, வளர்ச்சி திட்டத்தைக் கொண்டுவரும் போது விவசாய நிலங்கள் அழிய தான் செய்யும் எனப் பேசுவது கண்டனத்துக்குரியது.

பாபு முருகவேல்

‘எங்கள் நிலத்தை முழுவதும் அழிக்கிறது, அதனால் பரந்தூர் விமானம் நிலையம் வேண்டாம்’ என சொல்வதைக் கேட்டும் வளர்ச்சி என்பதைக் காரணம் காட்டி திட்டத்தைத் திணிக்கின்றனர். அதைத் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திலும் செய்கின்றனர். திட்டங்களைக் கொண்டுவரும் போது மக்கள் எதிர்ப்பது இயல்புதான். ஆனால் அதைப் புரிய வைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால், திமுகவைப் பொறுத்தவரை திட்டம் வேண்டும். ஆனால் எதிர்ப்பே வரக்கூடாது என சொல்வதில் நியாமில்லை.

அதிமுக ஆட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திதான் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். ஆனால், அதற்கு எதிர்மறையான விசயங்களைப் பரப்பி வருகின்றனர். சரி இவர்கள் சொல்வது போல் நாங்கள் முறையாக ஆட்சி செய்யவில்லை என வைத்துக்கொள்வோம். தற்போது, ஆட்சி அமைத்திருக்கும் திமுக எல்லாத்தையும் சரியாக செய்ய வேண்டியது தானே. மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்தை எதற்காகக் கொண்டு வருகின்றனர். இரட்டை வேடம் போட மட்டுமே திமுக-வுக்கு தெரியும். திட்டத்தை முறையாக நிறைவேற்ற அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

சிவ ஜெயராஜ்

இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர், ``எட்டு வழி சாலையைத் தான் திமுக எதிர்த்தது. சாலை அமைப்பதை திமுக எதிர்க்கவில்லை. எட்டு வழிச்சாலை அமைத்தால் விவசாய நிலங்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் என்பதால், அதை ஆறு வழிச்சாலையாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் அறிவித்த 8 வழிச்சாலை போல் இந்த 6 வழிச்சாலை அமையாது. திட்டமுறையே முற்றிலுமாக மாற்றப்படும். அதற்கான அறிவிப்பை 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கான ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது விசாரணைக்கு வந்து, தமிழக அரசு சார்பாக பதில் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு வர வேண்டும்.

கடந்த ஆட்சியில் மக்களிடம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் ஆறு வழிச் சாலை அமைக்க திட்டம் தொடங்கப்பட்டால் மக்களிடம் நிச்சயம் கருத்துக் கேட்கப்படும். திட்டத்துக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் திட்டம் செயல்படுத்த தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஆனால், அதை இன்னும் திமுக அரசு தொடங்கவில்லை. ஆரம்ப கட்ட பணியில் தான் இருக்கிறது. அது பற்றி இப்போது பேச தேவையில்லை. திமுக அரசு எட்டு வழிச்சாலைக்குத் தான் எதிராக நின்றதே தவிர சாலை அமைப்பதற்கு அல்ல” என முடித்துக் கொண்டார்.

from Tamilnadu News https://ift.tt/lpIPGZX

via

"குறையா இருக்குதா... வாய மூடிக்கினு இரு" அடுத்த சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி - நடந்தது என்ன?!

மகளிர் இலவச பேருந்து பயணத்தை 'ஓசி' என பேசியது தொடங்கி... பொது மேடையில் சாதியை குறிப்பிட்டு கேட்டது, ஒருமை மற்றும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்... குடிநீர் பிரச்னை குறித்து கேள்வியெழுப்பிய அப்பகுதி மக்களிடம், "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க" என பொன்முடி பேசியிருந்தது வாக்களித்த மக்களின் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் தான் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர்.

அமைச்சர் பொன்முடி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் சீரமைக்கப்பட்ட குளம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவை 15-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், "ஆண், பெண் சமம்; அனைத்து மதத்தினரும் சமம்; இதுதான் 'திராவிட மாடல்' என்று செயல்படுத்தி கொண்டிருப்பவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின். அவருடைய திட்டம் தான் இந்த 'நகர்புற மேம்பாட்டு திட்டம்'. 

கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அப்பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்படுகின்றவர். நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் பல்வேறு பணிகள் நடைபெற்றிருக்கிறது. எங்களுடைய நோக்கம் எல்லோரும் வளர வேண்டும் என்பதுதான்" என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், "எல்லாத்துக்கும் தான் குறையா இருக்குது" என கூறினார். அதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் பொன்முடி, "குறையா இருக்குதா.... நீ கொஞ்சம் வாய மூடிக்கினு இரு. உங்க வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா..." என்றார். அதற்கு அந்த பெண், "எப்பயோ அவர் போயிட்டாரு" என்று தெரிவிக்க, "போயிட்டாரா... பாவம்! இல்லாட்டி... நீ  இப்படியே அனுப்பி வச்சிட்டிருப்ப" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

பொன்முடி, ஸ்டாலின்

அப்போது தி.மு.க தொண்டர்கள், அந்த பெண்ணை அமைதிப்படுத்த முயற்சி செய்ய, "பாவம், அந்த அம்மா... அதோட குறைய சொல்லுது விடுங்க... நல்லதுதான்" என்று அமைச்சர் பொன்முடி பேச்சை திசை திருப்பினார். இதனால் அங்கு சற்று சலசலப்பு நிலவியது.

from Tamilnadu News https://ift.tt/kecMr6Q

``தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்; விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" - ஓ.பி.எஸ் அதிரடி

"டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" என்று ஓ.பன்னீர்ச்செல்வம் கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸ் - சசிகலா

சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்ச்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

"டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்படுவீர்களா?" என்ற கேள்விக்கு,

"வாய்ப்பிருந்தால் உறுதியாக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்." என்றவரிடம்,

தினகரன் - ஓ.பி.எஸ்

"சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள்?" என்றதற்கு,

"கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்." என்றார்.

தொடர்ந்து, "எடப்பாடி நடத்திய பொதுக்குழு ஆரம்பத்திலிருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாகவே நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்." என்றவரிடம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, "மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.

ஓ.பி.எஸ்

``முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பாக பேட்டி தருகிறார்களே" என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்காமல் சென்றார்.

from Tamilnadu News https://ift.tt/4UJsRPc

`பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரவேண்டும்' - அரசு ஊழியர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 6.8 லட்சம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருக்கின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது ஒருவர் ஓய்வு பெறும் போது 32 ஆயிரம் சம்பளம் வாங்கினால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ரூ. 16 ஆயிரம் கிடைக்கும். அதேசமயம் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 2,200 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும். இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கோரி கடந்த 14-ம் தேதியிலிருந்து மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை, கல்வித்துறை ஊழியர்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மருத்துவ பணிகள் மற்றும் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு நிர்வாகமும் முடங்கியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்ய மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஊழியர்கள் நிராகரித்துவிட்டனர். தாமதப்படுத்தும் நோக்கில் தான் கமிட்டி அமைத்திருப்பதாக ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``சில தொழிற்சங்கங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறது. கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும்.

பழைய ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறித்து 2030-ம் ஆண்டுதான் முழுமையாக தெரிய வரும். 2030-ம் ஆண்டு அதிகப்படியான ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு இமெயில் மூலமும், வாட்ஸ்ஆப் மூலம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் கிடையாது என்றும், இலாகா பூர்வ விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி 68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் போராட்டம் தொடரும் என்று மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயலாலர் விஹாஸ் கட்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``தாமதப்படுத்தும் நோக்கில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அவசர பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். அதேசமயம் இரண்டு சிறிய தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு 1.1 லட்சம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

from Tamilnadu News https://ift.tt/IJtV9Ba

ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளா?! - மறுத்த மத்திய அமைச்சர்

மொபைல்போன் விற்பனையில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. பேருந்துகள், ரயில்கள், சாலைகள், உணவகங்கள் என எங்கும் ஸ்மார்ட்போன் இல்லாத கைகளை காண்பதே அரிதாகிவிட்டது. சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களே பெரிதும் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக சீனாவின் ஷியோமி, விவோ, ஓப்போ ஆகிய 3 நிறுவனங்களே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான சந்தையை ஆக்கிரமித்துள்ளன. பொதுவாக ஸ்மார்ட்போன்கள் வருகை உலகில் பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறது, உலகத்தொடர்பை கைக்குள் கொண்டு வந்திருக்கிறது என பல்வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தாலும், அதன் பாதுகாப்பு குறித்த அச்சமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்

மொபைல்களை ஹேக் செய்து தகவல்களை திருடும் போக்குதான் அந்த அச்சத்திற்கு மிக முக்கிய காரணம். இதிலிருந்து பயனாளிகளைப் பாதுகாக்க பல்வேறு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டாலும் அதனையும் மீறி தகவல் திருட்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் குறிவைத்து உளவு பார்க்கப்படும் சம்பவங்களும், அதுகுறித்த செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்கவிருப்பதாகத் தகவல் பரவியது. நாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போதே அதில் inbuild வகையில் பல செயலிகள் இருக்கும். அந்த செயலிகளை நம்மால் அழிக்க முடியாது.

அதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியர்களின் மொபைல் பண்பாட்டை கண்காணித்து உளவு பார்க்க முடியும் என்ற அச்சம் இருந்துகொண்டு இருக்கிறது. அதனால் இனி inbuild செயலிகளையும் தேவைப்படாவிட்டால் அழிக்கும் வகையில், ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டுமென்று மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டது.

“மென்பொருள் இயங்குதளங்களை புதுப்பிக்கும்போது மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வகத்தில் ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்” உள்ளிட்ட கெடுபிடிகள் மத்திய அரசால் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் இருவர் அளித்த தகவலின் அடிப்படையில், இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

பயனாளர்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் இச்செய்தியைப் பகிர்ந்தனர். இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வரிசைகட்டி வெளியேறத் தொடங்கிவிடும் என சர்வதேச அளவில் இது பேசுபொருளானது. இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரக்சேகர் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், “இந்தக் கதை முற்றிலும் தவறானது. இதுபோன்ற பரிசோதனை அல்லது கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. மொபைல் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் நடந்துவரும் ஆலோசனையை வைத்து, தவறான புரிதல் அல்லது கற்பனையின் அடிப்படையில் இச்செய்தி பரப்பப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்குதலை எளிமையாக்குதலில் மத்திய அரசு 100% உறுதி பூண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மின்னணு உற்பத்தியை 300 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்ற இலக்கோடு மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

எனினும் மொபைல், இணைய பாதுகாப்புக்கான வலுவான கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்.

from Tamilnadu News https://ift.tt/N3daO4P

திண்டிவனம்: எதிர்ப்பு தெரிவித்த விசிக; ஹெச்.ராஜா, வேலூர் இப்ராஹிம், பாஜகவினர் கைது - நடந்தது என்ன?!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று மாலை பா.ஜ.க-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜாவும், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கிடையில், அண்மை சில தினங்களாக ஹெச்.ராஜா, வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருவது வி.சி.க-வினரிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் திண்டிவனத்தில் பா.ஜ.க-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, "திருமாவளவனை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவே திண்டிவனம் வராதே! திரும்பி செல்... இல்லையேல், திருமா திசை நோக்கி... மண்டியிட்டு மன்னிப்பு கேள்..!" என்ற வி.சி.க போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

விசிக போஸ்டர்

மேலும், "வி.சி.க சார்பில் இன்று மாலை 4 மணிக்கு மேல் ஹெச்.ராஜாவிற்கு எதிராக திண்டிவனத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பதியப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, "14.03.2023 அன்று ஹெச்.ராஜா பங்குபெறும் பாஜக பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது" என வி.சி.க-வின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், எஸ்.பி ஸ்ரீநாதாவை சந்தித்து மனு அளித்திருந்தார்.

எனவே, இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றால் பா.ஜ.க மற்றும் வி.சி.க-வினர் இடையே பிரச்னை ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பாதிப்பு உருவாகும் என்பதற்காக நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான போலீஸார் திண்டிவனத்தில் குவிக்கப்பட்டனர். மேலும், பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பாஜக தரப்பில் செய்யப்பட்டிருந்தது. 

வி.சி.க மா.செ புகார் மனு அளித்தார்

இதற்கிடையில், பா.ஜ.க-வின் இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பேருந்து கண்ணாடியை உடைத்த தென்னரசு என்பவரை, திண்டிவனம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், திண்டிவனம் கூட்டத்தில் பங்கேற்க வந்த வேலூர் இப்ராஹிம் செங்கல்பட்டு மாவட்டத்திலும்; ஹெச்.ராஜா பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துரையிலும் முன்னெச்சரிக்கையாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 

பொதுக்கூட்டத்திற்கு வந்த பா.ஜ.க-வினர் வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், பா.ஜ.க பொதுக்கூட்டத்திற்கு திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், ஹெச். ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாவளவன் மற்றும் போலீஸாரை கண்டித்து பா.ஜ.க-வினர் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் கைது செய்து, இரண்டு அரசு பேருந்துகளில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பா.ஜ.க-வினர் கைது

மேலும், ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்திலும் பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று இரவும் திண்டிவனத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், திண்டிவனம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

from Tamilnadu News https://ift.tt/zyVocUQ

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போருக்கு வழிவகுத்த துப்பாக்கிக் குண்டுகள்; தொடங்கி வைத்தவன் யார்?

இளவரசரின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அவர் மனைவியின் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இளவரசர் நினைவிழந்தார். ஆனால் அதற்கு முன் மனைவியைப் பார்த்து "சோஃபி இறந்துவிடாதே" என்று கதறினார். கவர்னரின் வீட்டை நோக்கி கார் பறந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தபோது இருவருமே உயிரோடு இருந்தார்கள். என்றாலும் கடும் காயங்களினால் அதன் பின்னர் இறந்துவிட்டார்கள்.

இளவரசரைச் சுட்டவுடன் துப்பாக்கியை தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டான் சதிகாரன். ஆனால் அருகிலிருந்த இருவர் சட்டென அவனை வளைத்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதலாம் உலகப்போரில் தொடக்கப்புள்ளியாக அமைந்த அந்த ஒருவனைப் பற்றி மேலும் சில விவரங்களை அறிந்து கொள்வோம். கவ்ரிலோ ப்ரின்ஸிப் (Gavrilo Princip) அவனது பெயர். போஸ்னியாவில் பிறந்தவன். எனினும் செர்பிய இனத்தைச் சேர்ந்தவன். மிகவும் ஏழ்மையான குடும்பம். அவனுடைய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளில் ஆறு பேர் பிறந்தவுடனேயே இறந்தனர். ஊட்டச்சத்து சிறிதும் கிடைக்கப் பெறாத தாய். ப்ரின்ஸிப்பை வளர்க்க முடியாத அவனது பெற்றோர் சரயோவோவிலுள்ள அவனது சித்தப்பா வீட்டுக்கு அவனை அனுப்பிவிட்டனர்.

கவ்ரிலோ ப்ரின்ஸிப்பை (Gavrilo Princip) பிடித்துக்கொடுக்கும் மக்கள்

ஆஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ப்ரின்ஸிப் கலந்து கொண்டான். முதலிலேயே 'கறுப்புக் கை' இயக்கத்தில் சேரத் தீர்மானித்தான். ஆனால் அவனது சிறிய உருவத்தைப் பார்த்த அந்த இயக்கம் அவனை அப்போது சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த நிராகரிப்பால் ஏமாற்றமடைந்த அவன், 'மற்ற யாரையும் விட நான் தாழ்ந்தவன் இல்லை' என்பதை நிரூபிக்கும் எண்ணத்தை அவனுக்குள் வளர்த்துக் கொண்டான். அதை அவன் நிரூபிக்க நினைத்ததே இளவரசரைக் கொல்ல முன் வந்ததற்கும் காரணமாக அமைந்தது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பிடிபட்ட இரண்டு பேரையும் காவல்துறை விதவிதமாக விசாரித்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையைக் கூறிவிட்டார்கள். இளவரசர் இறந்ததால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாவதற்கே இந்தக் கொலைதான் பிள்ளையார் சுழிப் போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆஸ்திரியா கொதித்துப் போனது. தங்கள் இளவரசர் இறந்ததையும் அதற்குக் காரணமாக செர்பிய இயக்கம் ஒன்று இருந்ததையும் ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டினால் ஜீரணிக்க முடியவில்லை. அதெப்படி ஒரு நாடு - அதுவும் நம்மை விட ஒரு மிகச் சிறிய நாடு, இப்படி ஒரு சதி திட்டம் தீட்டி அதில் வெற்றியும் பெறலாம்?

கொல்லப்பட்டபோது ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட் அணிந்திருந்த உடை

செர்பியாவைச் சேர்ந்த மூவர்தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை அறிந்து கொண்டது. "செர்பியா அரசு இந்த மூன்று பேரையும் வியன்னாவுக்கு (ஆஸ்திரியாவின் தலைநகர்) உடனடியாக அனுப்ப வேண்டும்'' என்று ஆணையிட்டது. (அம்புகள்தான் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். எய்தவர்கள் செர்பியாவுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள்).

செர்பியாவின் அப்போதைய பிரதமர் நிகோலா பாசிக் இதற்கு மறுத்தார். "எங்கள் நாட்டில் கைது செய்தவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்புவது முடியாது. ஏனென்றால் எங்கள் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை" என்று பதில் அனுப்பினார். தாங்களே ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதாகக் கூறினார்.

ஜூலை 23 அன்று, ஆஸ்திரிய அரசு செர்பியாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் உங்கள் மீது போர் தொடுப்போம் என்று ஒரு பட்டியலை முன்வைத்தது. இரண்டே நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. ஆனால், இந்தக் கடிதம் செர்பியா ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டதே மாலை ஆறுமணிக்குத்தான்!

ஆஸ்திரியா அந்தக் கடிதத்தில் ஆறு விஷயங்களை வலியுறுத்தி இருந்தது.

போஸ்னியா உள்ளிட்ட செர்புகள் ஒன்றாக இணைவதிலிருந்து செர்பிய அரசு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஸ்திரியாவுக்கு எதிரான பிரசாரத்தை செர்பிய ஊடகங்கள் தொடர்வதை அடக்க வேண்டும். ஆ​ஸ்திரியாவுக்கு எதிராக செர்பியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களைச் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இளவரசர் படுகொலை தொடர்பாக செர்பியா ஒரு விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அந்த விசாரணையில் ஆஸ்திரியாவும் பங்குகொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் கவ்ரிலோ ப்ரின்ஸிப் (முதல் வரிசையில் நடுவில்...)

செர்பியா, இந்த நிபந்தனைகளை ஏற்பதில் முதலில் தயக்கம் காட்டியது. எனவே குழப்பம் நீடித்தது. பிறகு மீதி நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட செர்பியா கடைசி நிபந்தனையை மட்டும் ஏற்க மறுத்தது.தாங்கள் நடத்தும் விசாரணையில் வேறொரு நாட்டுப் பிரதிநிதியைக் கலந்துகொள்ள வைப்பது என்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்று அது கருதியது. ஆனால், ஒத்துக்கொண்டால் ஒப்பந்தத்தை முழுமையாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டியது ஆஸ்திரியா.

இளவரசர் கொலை செய்யப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் செர்பியாவுக்கு ஆணையிட்டது ஆஸ்திரியா. ஆனால் செர்பியப் பிரதமரின் பதில் கிடைத்த மூன்றே நாள்களில் செர்பியாவின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்தது. ஆக, முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுதான் இது.

ஜூலை 28, 1914 அன்று போர் அறிவிப்பு வெளியானது.

- போர் மூளும்...

from Tamilnadu News https://ift.tt/AGnQmDL

தொடரும் சர்ச்சைகளால், இளைய மகனின் நிச்சயதார்த்தத்தை எளிய முறையில் நடத்திய கெளதம் அதானி!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் மற்றும் மகளின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தத்தை மிகவும் ஆடம்பரமான முறையில் நடத்தினார். இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலதிபர் கெளதம் அதானி தனது இளைய மகன் ஜீத் அதானியின் திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிய முறையில் நடத்தி முடித்திருக்கிறார். அகமதாபாத்தில் நடந்த இத்திருமண நிச்சயதார்த்தத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அதானி அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் அதானி நிறுவனம் தொடர்பாக வெளியான செய்திகளால் கம்பெனி பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதானி நிறுவன பங்குகள் உயர ஆரம்பித்திருக்கிறது. அரசியல் மட்டத்திலும் தொடரும் சர்ச்சைகளால் அதானி தனது மகனின் திருமண நிச்சயதார்த்தத்தை எளிய முறையில் நடத்தி முடித்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவிற்கும், ஜீத் அதானிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இருவருக்கும் வெளிநாட்டில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜீத் அதானி தனது தந்தையின் அதானி குரூப்பில் சேர்ந்தார். தற்போது இக்குழுமத்தின் நிதி பிரிவில் துணைத்தலைவராக இருக்கிறார்.

கெளதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி பிரபல வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதானி மகன் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் கலந்து கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

from Tamilnadu News https://ift.tt/orHwQkY

மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை கிளப்பிய முத்த வீடியோ - தாக்கரே முகநூலை நிர்வகித்து வந்தவர் கைது!

மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ.பிரகாஷ் சுர்வே, கட்சியின் பெண் நிர்வாகி சீத்தல் மாத்ரேயிக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோ போலியானது என்றும், அதனை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா நிர்வாகிகள் தான் போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்று சீத்தல் மாத்ரே தெரிவித்துள்ளார். அதோடு இந்த வீடியோ உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்துதான் வந்தது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த சர்ச்சைக்குறிய வீடியோ தொடர்பாக ஏற்கனவே அசோக் மிஸ்ரா மற்றும் மனாஸ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களோடு சேர்த்து விநாயக் தர்வே என்பவரையும் கைது செய்துள்ளனர். விநாயக் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அதோடு தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்ல ஃபேஸ்புக் பக்கத்தையும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஃபேஸ்புக் பக்கத்தையும் விநாயக்தான் கையாண்டு வருகிறார். மேலும் யுவசேனாவை சேர்ந்த சாய்நாத் மற்றும் ரவீந்திர செளத்ரி என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

போலி வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை நடத்தவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இப்பிரச்னை குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சர் சம்புராஜ் தேசாய் அவையில் அறிவித்தார். இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் திட்டமிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதால் இது குறித்து முழுமையாக விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகிகள் இடையே ஒருவரை ஒருவர் களங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை தங்களது பக்கம் இழுக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சியினர் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

from Tamilnadu News https://ift.tt/N0OM4UL

'அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்?' - உலக நாடுகள் உற்று நோக்கும் பயணம், ஏன்?!

"கடுமையான பின்விளைவுகளை..."

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைவதாக அறிவித்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், "உக்ரைன் நேட்டோ படையில் இணைய தொடர்ந்து முயன்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

உக்ரைன் பாக்முட் நகரம்

இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார் புதின். அதன்படி இருநாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

500 மில்லியன் டாலருக்கு உதவி:

இதில் உக்ரைன் நாட்டின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். மறுபுறம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதனால் அந்த நாடும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஷ்ய படைகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி

இதற்கிடையில் கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், "உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது" என தெரிவித்தார். இது ரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

"1,100 பேர் பலி..."

இதையடுத்து ரஷ்ய படைகள் பாக்முட் நகரத்தை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஏனெனில் இந்த நகரத்தை கைப்பற்றுவதன் மூலம் எளிதாக அந்த நாட்டை வலுவிழக்க செய்ய முடியும் என ரஷ்யா நம்புகிறது. பதிலுக்கு உக்ரைனும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இரண்டு பக்கத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஜெலன்ஸ்கி - புதின்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "கடந்த சில நாள்களில் மட்டும் ரஷ்ய படைகளை சேர்ந்த 1,100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் படுகாயமடைத்திருக்கிறார்கள்" என்றார். பதிலுக்கு ரஷ்யா, "உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 220 வீரர்களை பலியாகியிருக்கிறார்கள்" என தெரிவித்திருக்கிறது.

"பாக்முட்டில் வாழ்த்த 70,000 மக்கள்..."

முன்னதாக இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கு முன்பு பாக்முட் பகுதியில் 70,000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் அமைத்திருக்கும் உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்கள் மற்றும் பெரிய ஒயின் ஆலைகள் மிகவும் பிரபலமானது.

ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் இந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் உக்ரைனும் அதை விட்டுவிடாமல் கடுமையாக போராடி வருகிறது. முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "பாக்முட் எங்கள் மன உறுதியின் கோட்டை" என்றார்.

"3-வது முறையாக..."

மேலும் அவர் அமெரிக்க காங்கிரஸுக்கு ஒரு பாக்முட் கொடியையும் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மேற்கத்திய அதிகாரிகள், "பாக்முட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 20,000 முதல் 30,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இவ்வாறு இந்த பிரச்னை மிக தீவிரமாக இருக்கும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றிருக்கிறார். அந்த நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியாக இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

"வலிமை மிக்க தலைவராக..."

இதை அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவி ஏற்றுக்கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு அதிக முறை அதிபராகியிருக்கும் ஒரே தலைவர் ஜி ஜின்பிங் இருக்கிறார்.

மாவோ

முன்னதாக கடந்த அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் ஜி ஜின் பிங், அதையும் மாற்றினார். எனவே உலகில் இருக்கும் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

"அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம்..."

இவரின் அரசு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அதை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று தான் அழைத்து வருகிறது. இந்நிலையில் தான் 3-வது முறையாக பதவியேற்றிருக்கும் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் ரஷ்யா செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யா, சீனா

இது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை தொற்றிக்கொள்ள செய்திருக்கிறது. இதுகுறித்து பேசிய சீன அதிபர் மாளிகை வட்டாரங்கள், "சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பரும் அந்த நாட்டின் அதிபருமான விளாடிமிர் புதினை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் இருக்கக்கூடும்" என்றனர்.

"மாஸ்கோ சென்ற வாங் யீ"

மேலும் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ரஷ்யாவின் டாஸ் (Tass) செய்தி நிறுவனம், "கடந்த ஜனவரி 30-ம் தேதி சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ரஷ்யா அதிபர் புதின் பேசினார். அப்போது அவர் ரஷ்யாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்" என தெரிவித்திருக்கிறது. மேலும் பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, "சீனா அதிபர் ஜி ஜின்பிங் - ரஷ்யா அதிபர் புதின் இடையேயான சந்திப்பு ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறலாம்" என தெரிவித்திருந்தது.

புதின்

இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பான கேள்விக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகமும், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் உடனடியாக பதிலளிக்கவில்லை. முன்னதாக கடந்த மாதம், மாஸ்கோவிற்கு சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ (Wang Yi), ரஷ்யா சென்றிருந்தார், அவருக்கு புதின் விருந்தளித்திருந்தார்.

"கையெழுத்தான "வரம்புகள் இல்லை" ஒப்பந்தம்..."

அப்போது உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த சந்திப்பு பின்நாளில் சீனா அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சமிக்கைகளை வழங்கும் வகையில் இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டுக்களுக்கான தொடக்கவிழா நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக புதின் சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான `வரம்புகள் இல்லை’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

பெய்ஜிங்

சீனாவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து ஜி ஜின்பிங் 39 முறை ரஷ்ய புதினை நேரில் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய ஆசியாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு நாடுகளுக்கு எதிரான இருபெரும் தலைவர்களும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/JsA6xai