சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம்பெறவுள்ளது.
பட்ஜெட்
சட்டப்பேரவையில் வரும் மார்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழலில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
மகளிருக்கு ரூ. 1000
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறம். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments: